08 பிப்ரவரி 2023
நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு, நாட்டு மக்களின் வாழ்வதற்கான உரிமையும் மீறப்பப்பட்டுள்ள இவ்வேளையில், அரச நிதியை அதிகளவில் பயன்படுத்தி அரசாங்கத்தால் 75வது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகளை நடத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்த சமூக செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கங்கள், தொழில் வல்லுனர்கள், சிவில் அமைப்புகள் மற்றும் பொது மக்களால் மேற்க்கொள்ளப்பட்ட கள அமைதியான சத்தியாக்கிரகத்தின் மீது வன்முறை குழுகள், காவல்துறை மற்றும் இராணுவம் ஆகியவற்றின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட வெட்கமற்ற மற்றும் கொடூரமான தாக்குதலை சிவில் அமைப்புகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் என்ற வகையில் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
குறிப்பாக அரசாங்கத்தின் “சுதந்திரதின கொண்டாட்ட” நிகழ்வுகள் இடம்பெறும் நாட்களில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்துவது குறித்து நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட உத்தரவுக்கமைய எவ்வித குழப்பங்களோ அல்லது பொதுமக்களுக்கு இடையூறுகள் எதுவுமின்றி நடத்தப்பட்ட சத்தியாகிரகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் நாட்டு மக்களின் அமைதியாக ஒன்றுகூடும் உரிமை மற்றும் எதிர்ப்புத் தெரிவிக்கும் உரிமை தற்போதைய சூழல் மிகவும் மோசமாக நிலையை பிரதிபலிக்கின்றது.
இந்த தாக்குதல்களில் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர்களுக்கு மருத்துவ அல்லது சட்ட உதவி சேவைகளைப் பெறுவதற்குள்ள உரிமையை மீறுவதன் ஊடாக அவர்களின் அடிப்படை உரிமையை மீறும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதேநேரம் “சுதந்திர தினத்திற்கு” இணையாக வடக்கு, கிழக்கு மாணவர் அமைப்புக்கள் மூலம் ஏற்பாடு செய்திருந்த பேரணிக்கு, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உட்பட சமூக அமைப்புக்களால் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தையும் குழப்புவதற்கு தற்போதைய அரசாங்கம் முயற்சித்திருந்தது.
ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது அந்த நாட்டு மக்கள் தங்களின் அடிப்படை உரிமைகளை அனுபவித்து, கௌரவமான பிரஜைகளாக வாழ்வதற்குள்ள உரிமையே சுதந்திரமாகும். சுதந்திரத்தை கொண்டாடும் பெயரில் தற்போதைய அரசாங்கம் இந்த நாட்டின் மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கின்றது.
பொருளாதார நெருக்கடி காரணமாக, நாட்டு மக்கள் தற்போது பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை, வேலை இழப்பு, வரிச்சுமை போன்ற பிரச்னைகளால், நாட்டின் பெரும்பான்மையான மக்கள், தங்களது அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. யுத்தம் மற்றும் இனவாத அரசியலால் ஒடுக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் சமூகங்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட மலையக மக்கள், மேலும் பலருக்கும் கிடைக்ப்பபெற்றதெனும் கூறும் “சுதந்திரத்தின்” பின்னரும் தமது அடிப்படை உரிமைகள் கூடயின்றி துன்பப்பட்டு வருகின்றனர்.
“சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள்” நிறைவு பெறும் இந்த தருனத்தில் நாட்டு மக்கள் முகம்கொடுத்துவரும் இப்பிரச்னைகளை தீர்ப்பது குறித்து கவனம் செலுத்தாது அது குறித்து குரல்கொடுக்கும் மக்களை தொடர்ச்சியாக ஒடுக்க முயல்வது வருத்தம் கவலைக்குரிய விடயமாகும்.
இலங்கை தற்போது எதிர்நோக்கும் பாரிய பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு பிரதான காரணம் கடந்த அரசாங்கங்கள் கடைப்பிடித்த தன்னிச்சையான, தான்தோன்றித்தனமான மற்றும் அடக்குமுறை நடவடிக்கைகளே பிரதான காரணம் என்பதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த விரும்புகின்றோம்.
எனவே, அரசாங்கத்தின் தற்போதைய அடக்குமுறை நடவடிக்கைகள் இந்த நெருக்கடிகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக அவற்றை மேலும் தீவிரமாக்குமென நாங்கள் நம்புகிறோம்.
அமைதியான முறையில் ஒன்றுகூடுதல், அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவித்தல் என்பது இலங்கையின் அரசியலமைப்பின் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமையாகும். தற்போதைய அரசாங்கம் தான்தோன்றித்தனமாக இந்த நாட்டு மக்களின் குறிப்பிட்ட உரிமையையே மீறுகிறது. எனவே, நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் உட்பட, வாழ்வதற்கான உரிமையை பாதுகாத்துக்கொள்வதற்காக தீர்க்கமாக தலையிடுமாறு தேசிய மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் நாட்டு மக்கள் அனைவரிடமும் சகோதரத்துவத்துடன் கேட்டுக்கொள்கின்றோம்.